Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நடுத்தர மக்களுக்கான சிறந்த கட்டுமான விருது 2015 குரு ஹோம்ஸ் உரிமையாளர் திரு. எஸ். நாராயணன் அவர்கள்







சென்னை, நங்கநல்லூர், குரு ஹோம்ஸ் அதிபர், திரு. எஸ்.நாராயணன் அவர்கள் (வயது 72), அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் 25 ஆண்டுகளாக சென்னையின் முன்னனி கட்டுமான நிறுவனத்தைத் துவங்கி, தென் சென்னையின் பல பகுதிகளில் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் குடியிருப்புகளை கட்டுவதில் சிறந்த கட்டுமான நிறுவனம் மற்றும் சிறந்த கட்டுமானப் பொறியாளர் என்ற வகையில் மேதகு தமிழக ஆளுநர் டாக்டர் திரு. கே. ரோசய்யா அவர்களிடமிருந்து கடந்த பிப்ரவரி 07, 2016 அன்று மாலை சென்னை மியூசிக் அகாடமி அரங்கத்தில் விருது வழங்கப் பெற்றார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த எஸ். இராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. எஸ். நாராயணன் அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பொறியாளராக 27 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் நமது சமுதாயத்தின் விடிவெள்ளி கலசலிங்கம் பல்கலைக்கழக நிறுவனர் கல்வி வள்ளல் கலசலிங்கம் அவர்களின் தூண்டுதலாலும், உதவியாலும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத் துறையில் கால்பதித்து தன் கடும் உழைப்பாலும், நாணயத்தாலும் தென் சென்னை பகுதிகளில் பல குடியிருப்புகளை உருவாக்கி தற்போது வெற்றிகரமாக தொழிலை மேற்கொண்டு வருகிறார். 


திரு எஸ். நாராயணன் அவர்களது எண்ணத்தில் உதித்த திட்டமே நமது சாலியர் சமுதாய மக்களுக்கான தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு மற்றும் திருமணத் தகவலுக்கான இணையதளம்

www.saliyarcommunity.in 
 
அன்னாருக்கு சாலியர் குரல் தன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இத் தொழிலில் மேன்மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறது.



க. சங்கிலிக்காளை, சென்னை.

1 கருத்து:

  1. நண்பர் எஸ் நாராயணன் அவர்கள் சிறந்த கட்டுமானப் பொறியாளர் என்ற வகையில் மேதகு தமிழக ஆளுநர் டாக்டர் திரு. கே. ரோசய்யா அவர்களிடமிருந்து கடந்த பிப்ரவரி 07, 2016 அன்று மாலை சென்னை மியூசிக் அகாடமி அரங்கத்தில் விருது வழங்கப் பெற்றார். என்ற செய்தியைக் கண்ட நான் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன். இளவயதில் என் நண்பராக இருந்ததோடு அன்றிலிருந்தே முதன்மை பெற்று விளங்கியவர் எனவே இன்றும் கட்டுமானபணியில் சிறந்த கலைஞர் என்ற விருது பெற்றது மமிகுந்த மகிழ்ச்சி . அன்னாருக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு

    பதிலளிநீக்கு